பிக்பாஸ் 3 -முதல் நாளிலேயே ஒரு காதல் அத்தியாயத்தை ஆரம்பித்துவைத்த அபிராமி

0
399

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் வீட்டிற்குள் முதல் நாள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. தண்ணீர், கேஸ் ஆகியவற்றிற்கு அளவு வைத்துதான் செலவு செய்ய வேண்டும் என சொன்ன விவகாரத்தில் பாத்திமா பாபுவுக்கும், சேரனுக்கும் சண்டை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போனது. வனிதா விஜயகுமார் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து வேறு சிறப்பு நேற்று இல்லாமல் இருந்தது.

 

ஆனால், நள்ளிரவு நேரத்தில்நேர்கொண்ட பார்வைநாயகிகளில் ஒருவரான அபிராமி, ஷெரின் இருவரும் பேசிக் கொண்டது சுவாரசியமாக ஆரம்பமானது. அபிராமி, கவின் மீதான அவருடையகிரஷ்பற்றி பேசி முதல் நாளிலேயே ஒரு காதல் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தார்.

 

எனக்கு சீரியல் எல்லாம் பார்க்கப் பிடிக்காது. ஆனால், சரவணன் மீனாட்சி வரும் போது மட்டும் அம்மாவிடம் சென்று தமிழ் நல்லா நடிக்கிறான் இல்லமா என்பேன். கவின் பெயர் அந்த சீரியலில் தமிழ். பின்னர் கவினுடன் பேஸ்புக்கில் நண்பரானேன். இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும் கவினுக்கு நான்தான் முதலில் பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். எந்த பந்தாவும் இல்லாத நல்ல பையன் கவின்,” என ஷெரினிடம் கவினைப் பற்றிய தன் அன்பைப் பரிமாறிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அந்த உரையாடலில் சாக்ஷி அகர்வாலும் கலந்து கொண்டார்.

 

ஆக, பிக் பாஸ் 3 சீசனின் முதல் நாளிலேயே ஒரு காதல் கதை ஆரம்பமாகிறது. இது போகப் போக என்னவாகுமோ…?.

LEAVE A REPLY