பிக் பாஸ் 2 வில் சண்டை சச்சரவுக்கு ஏற்ப்பாடு செய்த விஜய் டிவி !!!!

0
1163

பிக் பாஸ் 2 இந்த சீசனில் யார் ஹீரோ &வில்லன் வில்லி என்பதை பார்போம்.

நேற்று மிக பிரமாண்டமாக பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியது. ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடி நடிகர், கவர்ச்சிக் கன்னி என்று ஒரு கமர்ஷியல் படம் எடுக்கத் தேவையான ஆட்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் புகழ் யாஷிகா தான் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். காவல் நிலையம் வரை சென்ற அவர்களின் பிரச்சனை பற்றி அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

பிக் பாஸ் வீடு என்றால் சண்டை, சச்சரவு இருந்தால் தானே களைகட்டும். அந்த வேலையை நித்யாவும், பாலாஜியும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனைவி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒன்று நினைக்க தாடி பாலாஜியோ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மனைவியுடன் சமரசமாகிவிட வேண்டும் என்று விரும்புகிறார். இதில் யார் நினைத்தது நடக்கப் போகிறதோ?

நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது தாடி பாலாஜியும், நித்யாவும் ஒருவரையொருவர் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை மாறாக சிரித்துக் கொண்டனர். பாலாஜி நேற்றே தனது வேலையை துவங்கிவிட்டார்.

வெளியே வேறு விதமாக உள்ள ஆட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் வேறு விதமாக நடப்பார்கள். இதை கடந்த சீசனில் பார்வையாளர்கள் பார்த்துவிட்டனர்.

LEAVE A REPLY