அஜித் சிலையால் சிக்கலில் சிக்கி தவிக்கும் இமான் அண்ணாச்சி!

0
827
அஜித் சிலை

சிவா –அஜித் கூட்டணியில் விவேகம் படம் உருவாகிவுள்ளது இப்படத்தை அஜித் ரசிகர்கள் வரவேற்கும் வகையில் விவேகம் படத்தில் அஜித் வரும் கெட்டப்பில் சிலை ஒன்றை செய்து அச் சிலையை திறந்து வைக்க நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி அவர்களை அழைத்திருக்கிறார்கள். அஜித் சிலை என்றதும் இவர் மிகவும் ஹப்பி ஆகா திறந்து வைத்தார்.

அதன் பின்  மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இதுவரை நன் அஜித்துடன் நடித்தது இல்லை என்றாலும் என்னை ரசிகர்கள் அழைத்ததால் அஜித் சிலையை திறந்து வைக்க வந்தேன். அடுத்து அஜித் – சிவா இணையும் படம் அல்லது வேறு படத்தில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று பொதுவாக கூறியிருக்கிறார்.

மீண்டும் அஜித் – சிவா கூட்டணி இணைவதாக இமான் அண்ணாச்சி கூறியது போன்ற செய்திகள் பரவ, இப்போது நான் அப்படி சொல்லவில்லை என்கிறார். இப்படியொரு செய்தியை நான் வெளியிட்டதாக அஜித்தோ அல்லது டைரக்டர் சிவாவோ கேள்விப்பட்டால் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருப்பதாக என்னை தவறாக நினைப்பார்கள்
அஜித் சிலையை திறந்து வைக்க சந்தோசமா சென்ற நான், இப்போது இப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறேன் என்று புலம்பி தவிக்கிறார் இமான் அண்ணாச்சி.

 

LEAVE A REPLY