அஜித் படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை காரணம் இதோ!!!

0
676

பிரபல பாலிவுட் நடிகை பரிணிதி சோப்ரா கால்ஷீட் பிரச்சினை காரணமாக அஜித்தின் வலிமை படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு வலிமை எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அஜித்தை தவிர்த்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விபரம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஸ்ரீதேவி – போனி கபூரின் மூத்தமகள் ஜான்வி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை பரிணிதி சோப்ராவை படக்குழு அணுகியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது பிரபல டென்னிஸ் வீராங்கனை சாய்னாவின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார் பரிணிதி. எனவே, கால்ஷீட் பிரச்சினையால் வலிமை படத்திற்கு தேதி ஒதுக்க இயலவில்லையாம். எனவே வலிமை பட வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY