அடுத்த அடுத்த தோல்வியால் சம்பளத்தை குறைத்த நம்பர் 1 நடிகை!!!

0
371

தமிழ்த் திரையுலகில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஒரு தோல்வி கொடுத்தாலும் அடுத்து உடனே ஒரு ஹிட் கொடுத்து அவருடைய மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்வார். ஆனால், இந்த 2019ம் ஆண்டு அவருக்கு ராசியான ஆண்டாக இல்லாமல் போய்விட்டதோ எனத் தோன்றுகிறது.

இந்த வருடத் துவக்கத்தில் அவர் நாயகியாக நடித்த ‘விஸ்வாசம்’ படம் மட்டும்தான் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின் வெளிவந்த ‘ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம்’ ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்துவிட்டன. இவற்றில் இரண்டு படங்களில் நயன்தாராதான் முதன்மைக் கதாநாயகி.

தன்னுடைய படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்த காரணத்தால் தன் சம்பளத்தை கணிசமான அளவில் குறைத்துக் கொள்ள அவர் முடிவு செய்துள்ளாராம். படத்திற்கேற்றபடி நான்கைந்து கோடிகள் வாங்கி வரும் அவர் நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் வந்தால் ஒரு கோடி வரை சம்பளத்தைக் குறைக்கத் தயார் என கோலிவுட்டில் தகவலைப் பரப்பிவிட்டுள்ளாராம்.

LEAVE A REPLY