அந்த நபர் என் நண்பர் மட்டுமே அனுஷ்கா அளித்த அதிரடி பதில்!!!!

0
673

அனுஷ்கா நடிப்பில் வெளியாக உள்ள படம் பாகமதி. அனுஷ்கா உடன் மலையாள நடிகர்கள் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அசோக் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பாகமதி படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்த அனுஷ்கா செய்தியாளர்களிடம் பேசியதாவது…

பாகமதி சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம். ருத்ரமாதேவி, பாகுபலி படங்களுக்கு எந்த தொடர்பும் இருக்காது. முற்றிலும் வித்தியாசமான புதுமையமான கதையம்சம் உள்ள படம். சஞ்சனா என்ற பெயரில் ஐஏஎஸ்., அதிகாரியாக நடித்திருக்கிறேன்.

பாகமதி அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்கும் படியான கதையில் உருவாகி உள்ளது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அனைவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இதில் என் ரோல் இன்னும் முதன்மையானதாக இருக்கும்.

கடந்த ஐந்தாண்டுகளாக ருத்ரமாதேவி, பாகுபலி, பாகுபலி-2 போன்ற படங்களில் நடித்தேன். இதனால் அதிகமான தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை. இனி வரும் காலங்களில் நிறைய படங்களில் நடிப்பேன். தமிழில் தற்போதைக்கு எந்த படத்திலும் நடிக்கவில்லை. கவுதம் மேனன் படத்தில் மட்டும் கமிட்டாகி உள்ளேன். அவர் எப்போது தொடங்குகிறாரோ அப்போது நடிப்பேன்.

என்னைப்பற்றி வரும் திருமண வதந்திகள் எல்லாம் பொய்யானது. இதுபோன்ற செய்திகளால் இன்னும் எத்தனை முறை தான் எனக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று தெரியவில்லை. நேரம் வரும்போது எனது திருமணம் நடக்கும். எனக்கு ஏற்ற ஒருவரை பார்க்கும் போது அவரை திருமணம் செய்து கொள்வேன். நிச்சயமாக பிரபாஸ் என் நண்பர் மட்டுமே, மற்றபடி எங்களுக்குள் வேறு எதுவும் கிடையாது.

தேசிய விருது வாங்க வேண்டும் என்பதற்காக நடிக்கவில்லை. என் மனதுக்கு பிடித்தமான கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். அந்த மனநிறைவே போதும். நான் யாருடனும் போட்டியிடவில்லை, எனக்கான படங்கள் எனக்கு கிடைக்கும். புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்ற நான் தயாராக உள்ளேன். ஆனால் கதை பிடிக்க வேண்டும். சமீபகாலமாக அனைவரும் ஒரே மாதிரியான கதையம்சம் உள்ள படங்களுடன் அணுகிறார்கள். அதனால் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.

நடிகர்கள், அரசியலுக்கு வருவது அவர்களி தனிப்பட்ட விருப்பம், இதில் நான் கருத்து ஏதும் கூற முடியாது. அரசியலில் எனக்கு ஆர்வமில்லை. இப்போதைக்கு நிறைய படங்கள் பண்ண வேண்டும், பிறகு கல்யாணம் அவ்வளவு தான்.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

LEAVE A REPLY