அனுஷ்கா சர்மா தயாரிக்கும் ‘பரி’ படபிடிப்பு தளத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

0
606

அனுஷ்கா சர்மா தயாரிக்கும் மூன்றாவது படம் ‘பரி’ . புதுமுகம் ப்ரொசித் ராய் இயக்கி வரும் படத்தை அனுஷ்கா தனது கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.இவருடன் இணைந்து க்ரிஅர்ஜ் என்டர்டெய்ன்மென்ட் பரி படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் அனுபம் ராய் இசையமைக்கிறார் படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. நேற்று இரவு படப்பிடிப்பு நடந்தபோது டெக்னீஷியன் ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியானார். இந்த சம்பவத்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. சம்பவம் நடந்தபோது அனுஷ்கா சர்மா, ஹீரோ பரம்ப்ரதா சாட்டர்ஜி ஆகியோர் அங்கிருந்தனர்.

LEAVE A REPLY