ஆண்ட்ரியா சொல்லும் அந்த தகவல்! நடந்தது என்ன?

0
436

நடிகை ஆண்ட்ரியா வட சென்னை படத்திற்கு பிறகு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவரை பார்ப்பது கடினமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தான்,

தொடர் ஆயுர்வேத சிகிச்சை மூலம் தற்போது புது மனுஷியாக உணர்கிறேன் என்று கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார்.அதனை பார்த்த ரசிகர்கள் பல மாதங்களாக ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் அளவுக்கு என்ன மன அழுத்தம் என கேட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்காமல் மவுனம் காத்த ஆண்ட்ரியா, பெங்களூரில் நடைபெற்ற கவிதை போட்டியில் கலந்து கொண்டார்.

அப்போது முழுக்க முழுக்க சோகமான கவிதைகளை வாசித்தார் ஆண்ட்ரியா. அதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு சோகம் ததும்ப என்ன காரணம் என கேட்டனர்.
அதுவரை மவுனம் காத்துவந்த ஆண்ட்ரியா தனது சோகத்திற்கான காரணத்தை கூறினார். அதாவது, திருமணமான நபருடன் தான் தவறான உறவு வைத்திருந்ததாகவும், அந்த நபர் தன்னை உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் கொடுமை படுத்தியதாகவும் கூறினார்.

அதன் காரணமாகவே பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி ஆயுர்வேத சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தார். இதனால்தான் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்ததாக கூறினார். ஆண்ட்ரியாவுடன் தொடர்பில் இருந்த அந்த நபர் யார் என்று யோசித்த ரசிகர்கள்.ஆண்ட்ரியாவிடமே இதுகுறித்து கேட்டனர்.அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா தனது கவிதை புத்தகமான ப்ரோக்கன் விங் புத்தகத்தில்

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் தைரியமாக எழுதியிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY