இனி நான் அவரின் ரசிகன் பிரபல இயக்குனரின் ஓபன் டக் !!

0
259

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை ‘மகாநதி, நடிகையர் திலகம்’ என தெலுங்கு, தமிழில் உருவாக்கினார்கள். தெலுங்கு படமான ‘மகாநதி’ இன்று வெளியாகியுள்ளது. தமிழ் ‘நடிகையர் திலகம்’ படம் வரும் 11ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படம் ஆரம்பமான போது சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்த போது பலரும் அது குறித்து கிண்டலும், கேலியும் செய்தார்கள். இதுவரை நடித்த படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பால் பெரிதாகக் கவரவில்லை. மேலும் அவருடைய சிரிப்பை விமர்சனம் செய்தும் பல மீம்ஸ்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் அவை அனைத்தையும் இந்த ஒரே படத்தில் மறக்கடிக்கச் செய்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் இன்று வெளியான ‘மகாநதி’ படத்திற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக நடிகை சாவித்ரியை திரையில் அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என தெலுங்கில் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. நிச்சயம் இந்தப் படத்திற்காக அவருக்குப் பல விருதுகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

‘பாகுபலி’ படத்தின் இயக்குனர் ராஜமௌலி, கீர்த்தி சுரேஷை வெகுவாகப் பாராட்டியுள்ளார். “இதுவரை நான் பார்த்த நடிப்பில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பது மிகச் சிறந்த நடிப்பு. சாவித்ரியை கீர்த்தி இமிடேட் செய்யவில்லை. வாழ்க்கையில் மீண்டும் சாவித்ரியைக் கொண்டு வந்திருக்கிறார் கீர்த்தி. துல்கர் சல்மான் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இனி நான் அவரின் ரசிகன். இயக்குனர் நாக் அஷ்வின், தயரிப்பாளர் ஸ்வப்னா ஆகியோருக்கு பாராட்டுக்கள். உங்கள் நம்பிக்கை, உறுதி, பிடிவாதம் அற்புதமானது,” என படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார்

LEAVE A REPLY