இனி நான் எப்படி இருப்பேன் கண்ணீர்விட்ட வனிதா!!!

0
523

பிக்பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டதால் அதிர்ச்சியடைந்த வனிதா கண் கலங்கியது பார்வையாளர்களை நெகிழ வைத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து இயக்குநர் சேரன் எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்படுவதாக அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். இதனால் ஹவுஸ்மேட்கள் அதிர்ச்சியாகினர். குறிப்பாக வனிதா ஷெரின், லாஸ்லியா ஆகியோர் நம்ப முடியாமல் இருந்தனர். லாஸ்லியா நீங்கள் போக்கூடாது அது நியாயம் இல்ல, நான்தான் போக வேண்டும் என்று கூறி அழுதார்.

 

ஷெரின் என்னை விட்டு போகாதீங்க என்று கூறி தழுதழுத்தார். அப்போது என்ன நடக்கிறது, இது எதை நோக்கி செல்கிறது என்று சேரன் எவிக்ஷன் குறித்து கேள்வி எழுப்பினார் வனிதா.எல்லோரையும் சமாதானப்படுத்தி புறப்படத் தயாரானார் சேரன். போறப்போக்கில் ஷெரினையும் வனிதாவையும் சமாதானப்படுத்தி, மீண்டும் பழையபடி நண்பர்களாக்கிவிட்டார் சேரன்.

 

ஆனால் சேரன் வெளியேறுவதை கொஞ்சமும் விரும்பாத வனிதா, நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தைரியத்தில்தான் நான் இங்கு இருந்தேன், இனி நான் எப்படி இருப்பேன் என கூறி கண்ணீர்விட்டார்.எப்போதும் குரலை உயர்த்தி யாருக்கும் பயப்படாமல் தன் மனதில் பட்டதை பட்டென் பேசுவார் வனிதா. ஆனால் சேரன் வெளியே போகிறார் என்றதும் உடைந்து அழுதார் வனிதா. இதுவரை யாருக்காகவும் வனிதா கண்ணீர் விட்டதே இல்லை.

 

சேரனுக்காக வனிதா கலங்கியதை பார்த்து பார்வையாளர்களும் சற்று கலங்கி போய்விட்டனர். பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு ஆதரவாக இருந்தது சேரன் மட்டுமே. மற்ற அனைவரும் அவரை எதிரியை போல் பார்க்கின்றனர்.இதனால் பயந்து அழுதாரோ, அல்லது பிக்பாஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவோமோ என்று அஞ்சி அழுதாரோ அல்லது வெற்றியாளராக வேண்டும் என்று எண்ணிய ஒரு நபர், வீட்டில் இருந்த ஒரு நேர்மையான நபர் வெளியேறிவிட்டதை நினைத்து அழுதாரோ தெரியவில்லை.

 

சேரன் கமலுடன் மேடையில் இருந்தபோதும், கமலுக்கு முன்பாகவே கண்ணீர் விட்டு அழுதார் வனிதா. வனிதா அழுதது நடிப்பாக தெரியவில்லை.ஆனால் சேரன் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே சீக்ரெட் ரூமில்தான் இருக்கிறார் என்பது அவருக்கு தெரியாது. அவர் சீக்ரெட் ரூமில்தான் இருக்கிறார் என்பதை அறிந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவார் என தெரிகிறது.

 

LEAVE A REPLY