எஸ்.ஏ.சந்திரசேகர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் விஜய் ஆண்டனி…

0
833

தனி ஒரு மனிதனாக சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்து போராடுபவரான டிராபிக் ராமசாமியின் கதை இப்போது திரைப்படமாகிறது. இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவரது மனைவியாக ரோகினி நடிக்கிறார். இவர்கள் தவிர ஹீரோவாக ஆர்.கே.சுரேசும் அவருக்கு ஜோடியாக உபாஷனாவும், அம்பிகா, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனியை அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த நன்றிக்காக விஜய் ஆண்டனி படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் விஜய் விக்ரம் இயக்குகிறார், குகன் ஒளிப்பதிவு செய்கிறார், பாலமுரளி பாலு இசை அமைக்கிறார். ஈரோடு மோகன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கியது. தற்போது மும்முரமாக படப்பிடிப்புகள் நடக்கிறது. முதல் கட்டமாக எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY