பாத்ரூமுக்குள் நடக்கும் திரைக்கதை!!!

0
470

 

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்சன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த அம்முவாகிய நான் மற்றும் நேற்று இன்று ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் தயாராகிறது.

தெலுங்கு நடிகர் அபிஷேக் வர்மா படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். எம்.எஸ்.பிரபு படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, வினோத் யஜமான்யா இசையமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் பத்மாமகன் கூறியதாவது: படத்தின் ஹைலைட்டான அம்சமே பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான். அந்த வகையில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி வித்தியாசமான, தமிழ் சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சியாக திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யமான அனுபவமாக இருக்கும் என்றார்.

LEAVE A REPLY