ஓவியாவின் அடுத்தட படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து!

0
3448

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் கொண்டார் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். அவரது ரசிகர் பட்டாளத்தை பார்த்து கோலிவுட்டே வியக்கிறது.ஓவியா நடித்துள்ள ஓவியாவ விட்டா யாரு படம் ரிலீஸாக தயாராக உள்ளது. ஓவியா ஆர்மியை மனதில் வைத்தே படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்துள்ள அடல்ட் காமெடி படம் ஹரஹர மகாதேவகி. இந்த படத்தை தயாரித்துள்ள தங்கம் சினிமாஸ் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஹரஹர மகாதேவகி படத்தை அடுத்து கவுதம் கார்த்திக்கை வைத்து இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தை எடுப்பதாக தங்கம் சினிமாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் கவுதம் கார்த்திக் தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். படத்தில் நடிக்க அவர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY