கட்டிப்பிடிக்க வந்த சினேகனுக்கு பல்பு கொடுத்த பிந்து மாதவி

0
4193

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் கவிஞர் சினேகன் பெண் போட்டியாளர்களின் கண் லேசாக கலங்கினால் கூட ஓடிப் போய் கட்டிப்பிடித்து தடவி ஆறுதல் கூறுவார். அதனால் கட்டிப்பிடி மன்னன் மற்றும் தடவியல் நிபுணர் என்று பெயர் வாங்கியுள்ளார்.

பிந்து மாதவி மற்றும் சினேகன் இருவரும் சேர்ந்து விளக்கு ஏற்றி வைத்து அது அணையாமல் விடிய விடிய பார்த்துக் கொள்ளும் டாஸ்க்கை வெற்றிகரமாக செய்தனர்.காலை 5 மணிக்கு மேல் சினேகன் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறேன் என்று பிந்துவிடம் கூறிவிட்டு விளக்குகளுக்கு அருகிலேயே பாய் விரித்து படுத்துக் கொண்டு பாடினார்.

பிக் பாஸ் கொடுத்த விளக்கு டாஸ்க்கை பிந்துவும், சினேகனும் வெற்றிகரமாக செய்து முடித்தார்கள். இதையடுத்து சினேகன் பிந்து மாதவியை கட்டிப்பிடிக்க வந்தார்.சினேகன் தன்னை கட்டிப்பிடிக்க வருவதை பார்த்த பிந்து அவரின் இரண்டு கைகளையும் பிடித்து ஹை ஃபை கொடுப்பது போன்று செய்துவிட்டார். சினேகனை தன்னை கட்டிப்பிடிக்க விடவில்லை.

டாஸ்க் வெற்றி என்ற பெயரில் சந்தோஷமாக கட்டிப்பிடிக்க வந்த சினேகனுக்கு சரியான நோஸ்கட் கொடுத்த பிந்து மாதவியை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.

LEAVE A REPLY