‘கபாலி’, ‘தெறி’ படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்தது விவேகம்!

0
1585

சத்யஜோதி நிறுவனம்  தயாரிபில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘விவேகம்’ பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. சென்னையில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் சில திரையரங்குகளில் ‘விவேகம்’ திரையிடப்பட்டது. பல்வேறு ஐடி நிறுவன ஊழியர்களும் மொத்தமாக டிக்கெட் புக்கிங் செய்ததால், முதல் நாள் டிக்கெட்கிற்கு சென்னையில் கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், சென்னையில் முதல் நாள் வசூலாக 1.21 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது ‘விவேகம்’. சென்னையில் ரஜினி நடித்த ‘கபாலி’ முதல் நாளில் வசூல் செய்த 1.12 கோடியே சாதனையாக இருந்தது. அதனை முறியடித்துள்ளது ‘விவேகம்’. விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ சென்னையில் முதல் நாள் வசூலாக 1.05 கோடி வசூலித்து தற்போது 3-ம் இடத்தில் இருக்கிறது.

காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY