கவர்சிகாட்ட தயங்கும் நடிகை!

0
652

‘குடும்ப பாங்கான கேரக்டரில் நடிப்பதற்கு ஏற்றவர்; அவரது தோற்றம் பக்கத்து வீட்டுப் பெண் போல் உள்ளது’ என, கயல் ஆனந்தி அறிமுகமான போது, திரையுலகில் அவரைப் பற்றி பேச்சு எழுந்தது. அதற்கு ஏற்ற வகையில், அவரும் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்த போது, கவர்ச்சியான வசனங்கள் பேச வேண்டியிருந்ததால், இயக்குனருடன் அவர் சண்டை போட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அவர் நினைத்தது போன்ற வாய்ப்பு எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால், ‘கவர்ச்சியாக நடிப்பது இல்லை’ என்ற கொள்கையை தளர்த்த முடிவு செய்துள்ளாராம், ஆனந்தி. இதற்கு பின்னராவது, அவருக்கு வாய்ப்புகள் குவியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY