கார் மீது வேன் மோதி கன்னட நடிகை ரச்சனா மரணம்!

0
2193

பெங்களூருவை சேர்ந்த நடிகர் ஜீவன் சுரேஷ் (25) கன்னட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இதேபோல நடிகை ரச்சனா (23) ஒரு சில கன்னட திரைப்படங்களில் துணை நடிகையாகவும், மகாநதி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து மங்களூரு குக்கே சுப்பிரமணிய கோயிலுக்கு நடிகர் ஜீவன் சுரேஷ், நடிகை ரச்சனா ஆகியோர் நண்பர்கள் 3 பேருடன் புறப்பட்டனர். அதிகாலை 2 மணியளவில் நெலமங்களா அருகே சென்று கொண்டிருந்தபோது, காரை முந்த முயற்சித்த வேன் வேகமாக மோதியது.

இதில் பயணித்த நடிகை ஜீவன் சுரேஷ், ரச்சனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடன் பயணித்த ரஞ்சித், உத்தம் பொன்னேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த நெலமங்களா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

LEAVE A REPLY