கோவாவில் இருந்து சென்னை திரும்பிய அஜித்!!

0
313

கோவாவில் இருந்து சென்னை திரும்பியபோது எடுக்கப்பட்ட அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. பொதுவாகவே திரையுலகைச் சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் தங்களது புகழ் வெளிச்சம், குடும்பத்தார் மீது குறிப்பாக குழந்தைகள் மீது படர்வதை பல முன்னணி பிரபலங்கள் விரும்புவதில்லை.

 

viswasam movie ajith images

இதனாலேயே கேமராக் கண்களுக்கு அவர்களை மறைத்தே வளர்க்கின்றனர். ஆனால், செல்போன் உதவியால் எப்போதும் கேமராவுடன் அனைவரும் வளைய வரும் இந்நாட்களில் இது சாத்தியப்படுவதில்லை. பொது இடங்களில் இத்தகைய பிரபலங்களைப் பார்க்கும்போது உடனடியாக அவர்களை தங்களது கேமராவிற்குள் பிடித்துவிடவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் விரும்புகின்றனர்.

LEAVE A REPLY