சன் டிவி சுமங்கலி தொடரில் நடித்து வரும் பிரபல நடிகையை மணக்கிறார் ஆர்.கே.சுரேஷ்!

0
1024

பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். தனது ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் மூலம் தர்மதுரை, சலீம் படங்களை தயாரித்தார். சாட்டை, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல படங்களை வாங்கி விநியோகம் செய்தார். இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லனான அறிமுகமானவர். அதன் பிறகு மருது படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது ஸ்கெட்ச், ஹரஹர மகாதேவகி, பள்ளி பருவத்திலே படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதுவல்லாமல் பில்லா பாண்டி, தனிமுகம், வேட்டை நாய் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆர்.கே.சுரேஷ் சுமங்கலி தொடரில் நடித்து வரும் பிரபல நடிகை திவ்யாவை திருமணம் செய்ய இருக்கிறார். இதுகுறித்து சுரேஷ் கூறியதாவது: இது காதல் திருமணம் அல்ல பெரியவர்கள் முடிவு செய்ததுதான். திவ்யா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர். எனது தூரத்து சொந்தம். எனது நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். சின்னத்திரையிலும் நடித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றவர்களே சொன்னார்கள். நானும் ஒப்புக் கொண்டேன். நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இன்னும் 2 மாதத்தில் திருமணம் நடக்கும் என்றார் சுரேஷ்.

LEAVE A REPLY