சமந்தாவின் புதிய முயற்சி கைகொடுக்குமா!!!

0
450

நடிகை சமந்தா தற்போது ‛96′ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இதையடுத்து வெப்சீரிஸில் நடிக்கிறார். இதுப்பற்றி சமந்தா அளித்த ஒரு பேட்டியில், ஒரே மீடியமாக சினிமாவிலேயே நடித்துக் கொண்டிருப்பது போர் அடிக்கிறது. அதனால் ஒரு மாற்றம் வேண்டும் என விரும்பினேன். அதற்கேற்ப வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு வந்தது.

ஒரே நேரத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளிலும் வெப் சீரிஸ் எடுக்கப்படுவதாக கூறினர். உடனே ஒப்புக் கொண்டேன். தற்போது, வெப் சீரிஸும் மக்கள் மத்தியில் பாப்புலராக இருப்பதால் அந்த மீடியத்தையும் பார்க்கும் முடிவில் தான் அதை ஒப்புக் கொண்டேன். இதிலும் வெற்றியடைவேன். அதேநேரம், சினிமாவில் இருந்து நான் முழுமையாக விலகி விடவில்லை. எப்போது வேண்டுமானாலும் சினிமாவிலும் நடிப்பேன் என்றார்.இந்த  சமந்தாவின் புதிய முயற்சி கைகொடுக்குமா என்று  பொருத்திருந்து பார்ப்போம்

LEAVE A REPLY