சமந்தா நடித்த காட்சிகளில் எனக்கு திருப்தி இல்லை இயக்குனருடன் தயாரிப்பாளர் மோதல் !!

0
465

சமந்தா பாட்டி-பேத்தி என இரு வேடங்களில் நடிக்கும் படம். ஓ பேபி எந்த சக்ககுன்னவே இப் படம் ஒரு கொரிய படமொன்றின் ரீமேக்காகும். இப் படத்தை தெலுங்க்கில் நந்தினி இயக்குகிறார்.

இந்தப் படத்துக்காக, படமாக்கப்பட்ட காட்சிகளையெல்லாம் தயாரிப்பாளர் சுரேஷ் பார்த்திருக்கிறார். அப்போது, அவருக்கு அதில் திருப்தி இல்லை. உடனே, சமந்தா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை திரும்பவும் படமாக்க வேண்டும் என, இயக்குநர் நந்தினியிடம் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு நந்தினி மறுப்பு தெரிவிக்க, இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில். ‘பட காட்சிகள் அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இதில், திரும்ப படமாக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை; காட்சிகளில், சமந்தா சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்கிறார் இயக்குநர் நந்தினி.

இதனால், படத்தின் கதி என்ன ஆகும் என தெரியவில்லை.

LEAVE A REPLY