சம்பள விவகாரத்தால் பட வாய்ப்பை இழந்த ராஷ்மிகா!!!

0
448

குறுகிய காலத்தில்  ஒரே படத்தின் மூலம் புகழ்பெற்றவர் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க  அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. இதனால் திடீரென கிடைத்த வெற்றியை தலைமேல் ஏற்றிக்கொள்ளும் சில நடிகைகள் சிக்கிக்கொள்ளும் சர்ச்சைகளில் தான் ராஷ்மிகாவும் தற்போது சிக்கி வருகிறார்.

தமிழில் விஜய், கார்த்தி ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ராஷ்மிகா தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.. ஆனால் சம்பள விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாததால் இந்த படத்தில் இருந்து அதிரடியாக விலகிக்கொண்டார் ராஷ்மிகா.

ஆனால் இதை தனது தன்மான பிரச்சினையாக எடுத்துக்கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு அடுத்ததாக பாலிவுட் தயாரிப்பாளருடன் தான் கூட்டணி சேர்ந்து தன தயாரிக்க இருந்த இந்திப்படத்திலிருந்து ராஷ்மிகாவை அதிரடியாக நீக்கி விட்டாராம்.. நானி நடித்த ஜெர்ஸி படத்தின் ரீமேக்காக ஷாகித் கபூரை வைத்து இந்தியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை, சம்பள விஷயத்தில் சமரசம் செய்ய முடியாத காரணத்தால் ராஷ்மிகா கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY