சீதக்காதி உருவானது எப்படி – விளக்கம் தரும் இயக்குனர் பாலாஜி !!!

0
303

இயக்குனர் பாலாஜி  நல்ல நகைச்சுவை மற்றும் எமோஷன் கலந்திருந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை ரசிகர்களிடம் பெற்றிருந்தார். சீதக்காதி படம் இந்த அம்சங்களுடன் உருவாகியிருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் உண்டு, அது இரண்டுமே உண்மையான சம்பவங்களின் அடிப்படையில்  உருவானது.

 

இந்த சம்பவத்தை இயக்குனர் பாலாஜி தரணீதரன் நினைவு கூறும்போது, “சில வருடங்களுக்கு முன் ஒரு மேடை  நாடகத்தை பார்த்து விட்டு வந்தபோது  என் மனதில் எழுந்த கேள்விகளிலிருந்து உருவான கதை தான் சீதக்காதி. மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் முன்பு நடிக்கும்போதும் கூட, ஆத்மார்த்தமான நடிப்பை கொடுக்கிறார்கள் மேடை நாடக நடிகர்கள். இருப்பினும், பார்வையாளர்களின் எண்ணிக்கை  விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் மிகவும் சொற்பமே. அதன்பிறகு, சில மணிநேரங்கள் அவர்களுடன் பேசினேன். அவர்களது குழந்தைத்தனமான உணர்ச்சிகள் மற்றும் உற்சாகத்தினால் ஆச்சரியமடைந்தேன். பணத்தை விடவும் பாராட்டு மற்றும் கைதட்டலை மதிக்கிறார்கள். நான் அங்கு இருந்து வந்தபோது, என் மனதில் நிறைய சந்தேகங்களும், கேள்விகளும் கற்பனைகளும் இருந்தன, இது தான்  படிப்படியாக சீதக்காதியாக உருவெடுத்தது” என்றார்.

 

தமிழ் பழமொழிக்கும், படத்தின் தலைப்புக்கும் இருக்கும் சம்பந்தம் பற்றி அவர் கூறும்போது, “இப்போதைக்கு கதையை பற்றிய எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்த முடியாது. ஏனெனில் அது ரசிகர்களின் அனுபவத்தை சிதைத்து விடும். படம் முடிந்தவுடன் தலைப்புக்கும், படத்துக்கும் உள்ள சம்பந்தத்தை ரசிகர்கள் உணர்ந்து கொள்வார்கள்” என்றார்.

 

விஜய் சேதுபதி பற்றி அவர் பேசும்போது, “சீதக்காதியுடன் எங்கள் இருவரது பயணமும் மிகப்பெரியது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் முடிந்த நேரத்திலேயே இந்த கதை என்னிடம் இருந்தது. விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க முடியுமா? என கேட்டார். அதை நான் கேலி என நினைத்து விட்டேன். பின்னர் 2017ல் திரும்பி அவரையே நடிக்க சொல்லி போய் நின்றேன். அவர் உடனடியாக எந்த தயக்கமும் இல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டார். ஒருவேளை, ‘அய்யா’ இது அவர் மூலம் நடக்க வேண்டுமென்று காத்திருந்தார் போல. சில நேரங்களில், வாழ்க்கையில், நாம் சில காரியங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, மாறாக அது தான் நம்மை தேர்ந்தெடுக்கும், இல்லையா?” என்றார்.

 

“சீதக்காதியின் எமோஷன் வெறும் கதை மற்றும் கேமரா லென்ஸோடு சுருங்கியது இல்லை, எனக்கு அதையும் தாண்டிய அனுபவம். நாடக கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய்தே எனக்கு கிடைத்த பெரும் பரிசு. சில நேரங்களில் அவர்கள் ஆத்மார்த்தமாக நடிக்கும்போது, பேச மறந்து நின்று விடுவேன். மௌலி சார் ஒரு நம்பமுடியாத நடிப்பை, பெரும்பாலும் சைலன்ஸ் மற்றும் ஒரு சில வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினார். அர்ச்சனா மேடம், மகேந்திரன் சார், ராஜ்குமார் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

 

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்த சீதக்காதி படம் டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இது போன்ற சினிமா நியூஸ் அனைத்தும் தெரிந்துகொள்ள எங்கள் சூப்பர் சினிமா whats up group யை பயன்படுத்தி கிளிக் செய்க.

‎Open this link to join my WhatsApp Group: https://chat.whatsapp.com/KwzNIPTIAp2KciGIgR6R5R

LEAVE A REPLY