டுவிட்டரில் ரசிகர்களிடம் கெஞ்சிய விக்னேஷ் சிவன்!

0
1219

சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று திடீரென தனது டுவிட்டரில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பு நடந்து வரும் பகுதியில் உள்ள ரசிகர்கள் படப்பிடிப்பை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பதிவு செய்து வருவதாகவும், இவ்வாறு செய்தால் தியேட்டரில் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.  எனவே திரையில் படம் பார்க்கும்போது முழு திருப்தியுடன் படம் பார்க்க இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விக்னேஷ் சிவனின் வேண்டுகோளை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

LEAVE A REPLY