தமிழில் டப் ஆகும் ஓவியாவின் மலையாள படங்கள் மகிழ்ச்சியில் ஓவியா ஆர்மி!

0
1232

களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா. பெரிய அளவில் ஜெயிக்க முடியாவிட்டாலும் சிறு பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். விஜய் டி.வி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் திடீரென பிரபலமானார். இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் நடித்து முடித்துள்ள சீனி என்ற படம் தற்போது ஓவியாவை விட்டா யாரு என்று தலைப்பை மாற்றி வெளிவர இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க ஓவியா நடித்துள்ள மலையாளப்படங்களை டப் செய்து இங்கு வெளியிட கடும் போட்டி இருக்கிறது. அந்த வரிசையில் முதலில் வரப்போகிறது ஓவியா நடிடித்த மனுஷ்யமிருகம் என்ற மலையாளப்படம்.

6 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இந்தப் படத்தில் பிருத்விராஜ், கிரண், ஓவியா நடித்திருந்தார்கள். பாபுராஜ் என்பவர் இயக்கி அவரும் நடித்திருந்தார். அன்வர் இசை அமைத்திருந்தார், கே.வி.சுரேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தை தற்போது போலீஸ் ராஜ்யம் என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஜெய்பாரதி மற்றும் அன்னபூரணி மூவீஸ் சார்பில் கே.அருணாசலம் வெளியிடுகிறார். தமிழ் பாடல் மற்றும் வசனங்களை புலவர் சிதம்பரநாதன் எழுதுகிறார்.

LEAVE A REPLY