திடீர் பிரபலமான அந்த நடிகை தனது ரசிகர்களுக்கு அளித்த வாக்கையும் காப்பாற்றவில்லையாம்

0
2598

திடீர் பிரபலமான அந்த நடிகை தனது ரசிகர்களுக்கு அளித்த வாக்கையும் காப்பாற்றவில்லை, அவர்களையும் கண்டுகொள்ளவில்லையாம். கோலிவுட்டில் யாரும் சீண்டாமல் இருந்த நடிகை ஒருவர் திடீர் என்று ஓவராக பிரபலமாகிவிட்டார். அவர் மீது தமிழக இளசுகள் அதீத பாசம் வைத்துள்ளனர். நடிகையோ அவர்களை கண்டு கொள்வது இல்லையாம். பார்ட்டி பார்ட்டி என்று ஜாலியாக இருக்கிறாராம்.

ரசிகர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்களுடன் சாட் செய்கிறேன் என்று அளித்த வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. நடிகையின் பார்வை படாதா, நம் பாசத்தை அவர் கண்டுகொள்ள மாட்டாரா என்று ரசிகர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் நடிகைக்கு அதற்கு எல்லாம் நேரம் இல்லை. தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளையும் கதையை கேட்காமல் ஓவராக சம்பளம் கேட்கிறாராம்.

LEAVE A REPLY