நடிக்க வாய்ப்பு தேடி வந்த பெண்ணை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த பிரபல தயாரிப்பாளர்

0
782

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி நடிக்க வாய்ப்பு தேடிய இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி. படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் 25 வயது பெண் மொரானி மீது ஹைதராபாத் போலீசில் புகார் அளித்தார். அவர் தனது மனுவில் மொரானி மீது பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

கரீம் மொரானி தனக்கு மயக்க மருந்து கொடுத்து பல முறை பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார். அந்த பெண் புகார் அளித்ததை அடுத்து கரீம் மொரானி முன்ஜாமீன் கோரி ஹைதராபாத் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் நீதிமன்றம் அவரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தனது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் உச்ச நீதிமன்றத்திலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை

உச்ச நீதிமன்றத்தை அணுகியும் முன்ஜாமீன் கிடைக்காததை அடுத்து கரீம் மொரானி ஹயாத்நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY