நாடு எங்கு செல்கிறது : தமன்னா ஆதங்கம்

0
517

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுதொடர்பாக நடிகை தமன்னா டுவிட்டரில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

அதில், ஜம்முவில் 8 வயது சிறுமியும், இன்னொரு ஊரில் 16வயது பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார். இதற்காக போராடிய அவரது தந்தையும் அடித்து கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளியை பாதுகாக்க இப்படி நடந்துள்ளது. நம் நாடு எதை நோக்கி செல்கிறது. இன்னும் எத்தனை நிர்பயாக்கள் தங்களது வாழ்வை தியாகம் செய்ய வேண்டுமோ? பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத நாடு பின்னடவை கொண்டதாகும். இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.

LEAVE A REPLY