நான் எந்த கவர்ச்சி போட்டோ சூட்டும் எடுக்கவில்லை!! காஞ்சனா 3 நடிகை விளக்கம் !!

0
480

கடந்த வெள்ளி அன்று  வெளியான காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்சின் காளி கேரக்டரில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அலெக்ஸ்சாண்ட்ரா என்ற ஆங்கில நடிகை. இவர்  சில  வருடங்களாக சென்னையில் வசித்து வருகிறார் மற்றும்  மாடலிங் தொழில் செய்து வருவதோடு, மாடலிங் கோ ஆர்டினேட்டராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அலெக்ஸாண்ட்ரா. ரூபேஷ் குமார் என்பவர் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை காட்டி அதை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் கூறியதாக செய்திகள் வெளிவந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் அப்படி புகார் எதுவும் தரவில்லை என்றும், ராகவா லாரன்ஸ் உதவியுடன் தான் பத்திரமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் எழுதியிருப்பதாவது:

எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாகவும், நான் புகார் அளித்ததாகவும் வந்த செய்திகள் தவறானது. நான் எந்த கவர்ச்சி போட்டோ சூட்டும் எடுக்கவில்லை. யாரும் என்னை மிரட்டவில்லை. எனக்கு 22 வயதுதான் ஆகிறது. திருமணமும் ஆகவில்லை. குழந்தைகளும் இல்லை. நான் லாரன்ஸ் மாஸ்டரின் உதவியுடன் பத்திரமாக இருக்கிறேன். அவர் என் குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறார். வீண்பழி சுமத்தும் இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

 

LEAVE A REPLY