பாசமலர்களாக மாறிய பிருத்விராஜ்-நஸ்ரியா!

0
867

‘பெங்களூர் டேய்ஸ்’ புகழ் அஞ்சலி மேனன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தி வருகிறார். பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் பார்வதி, நஸ்ரியா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

திருமணத்திற்குப்பின் நஸ்ரியா மீண்டும் நடிக்கும் படம் இது. ஏற்கனவே பிருத்விராஜின் ஜோடியாக ‘என்னு நிண்டே மொய்தீன்’, ‘மை ஸ்டோரி’ என இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் பார்வதி. அதனால் இந்தப்படத்தில் அனேகமாக நஸ்ரியா தான் பிருத்விராஜூக்கு ஜோடியாக இருப்பார் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் இந்தப்படத்திலும் அவருக்கு ஜோடி பார்வதி தானாம். நஸ்ரியா பிருத்விராஜூக்கு தங்கையாக நடிக்கிறாராம். பாசமான அண்ணன், அழகான பாய் பிரண்ட் இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தவுள்ளாராம் பிருத்விராஜ்.

LEAVE A REPLY