பிகில் ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமா?

0
368

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கிய பிகில் திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து, வரும் தீபாவளி நாளில் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், உதவி இயக்குனர் செல்வா, பிகில் திரைப்படத்தின் கதை தன்னுடையது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு படக் குழுவினர்களுக்கு, நேற்று முன் தினம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை, இன்று(17.10.19)ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே இந்த வழக்கின் முடிவுக்கு பின்பே, படத்தை வெளியிடும் தேதி உறுதி செய்யப்படும் என, படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால், படம் ரிலீசாவது தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY