பிக் பாஸ் நிகழ்ச்சியில் நா தழுதழுக்க அனிதா பற்றி பேசினார் கமல் ஹாஸன்.

0
655

மருத்துவர் ஆகும் கனவை கண்ணில் சுமந்த அனிதா நீட் தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது முடிவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த கமல் ஹாஸன் நிகழ்ச்சியை துவங்கும் முன்பு கமல் கூறியதாவது,
கேளிக்கைகளுக்குள் செல்வதற்கு முன் சில கேள்விகள் விடை தேட வேண்டிய கேள்விகள் காத்திருக்கின்றன. எல்லா கேள்விகளுக்கும் விடை கண்டிப்பாக உண்டு.

இந்த கேள்விக்கு விடையே இல்லை என்று மனம் தளருபவர்கள் நம் பிள்ளை அனிதா போல் தன்னையே மாய்த்துக் கொள்வார்கள். இந்த தலைகுனிவு இனி நமக்கு நிகழக்கூடாது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.

ஓலமிட்டு அழுதல் நமக்கு மனம் இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஆவண செய்வோம். இனி இது நிகழாது பார்ப்போம் என்று செயல்படுவது தான் நமக்கு மூளையும் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் செயல் ஆக இருக்கும்.

என்ன சொல்கிறீர்கள் இதற்கு மருந்து என்ன என்று என்னை கேட்டால் பள்ளிப் படிப்பை முடிக்காதவன் நான். செய்யும் ஆர்வம் இருக்கிறது. ஆற்றல் இருக்கிறதா என்று கேட்டால் அது இருப்பவர்கள் சொல்லட்டும். நாம் செவி சாய்ப்போம். நான் செவி சாய்க்கிறேன்.

யாரோ ஒருவர் செவி சாய்க்க மறந்ததினால் தானே நம் தலை சாய்கிறது வெட்கத்தில் இன்று. அனிதாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். எப்படி நந்தன் என்ற பெயரில் பல குழந்தைகள் இன்று தமிழ் உலகில் உலா வந்து கொண்டிருக்கிறதோ அது போல் அனிதா என்ற பிள்ளைகளும் வாழும் என்றார் கமல்.

LEAVE A REPLY