பிக் பாஸ் பிரபலத்தை மிரட்டிய ட்விட்டர் நெட்டிசன்!!!

0
364

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த சீசனில் தொலைக்காட்சி நடிகை தீபிகா காகர் இப்ராஹிம் டைட்டிலை வென்றுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீசாந்துக்கு டைட்டில் கிடைக்கவில்லை. இதனால் பிக் பாஸ் 12 டைட்டிலை வென்ற தீபிகா மீது ஆசிட் வீசப்போவதாக ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், கலர்ஸ் தொலைக்காட்சி சேனலும் பாரபட்சமாக நடந்து தீபிகாவை ஜெயிக்க வைத்துவிட்டதாக நினைக்கிறார்கள் ஸ்ரீசாந்த் ரசிகர்கள். இந்த காரணத்தால் அவர்கள் தீபிகாவை சமூக வலைதளங்களில் விளாசி வருகிறார்கள்.

தன்னை ஸ்ரீசாந்தின் தீவிர ரசிகர் என்று சொல்லிக் கொண்ட ஒருவர் ட்விட்டரில் தீபிகாவை திட்டியதுடன் அவர் மீது ஆசிட் வீசப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அவர் தனது ட்விட்டர் கணக்கையே நீக்கிவிட்டார். ஆனால் அதற்குள் அவரின் ட்வீட்டை பலரும் பிரிண்ட்ஸ்க்ரீன் எடுத்துவிட்டனர்.

தீபிகா மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் மும்பை போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் ஒரு பெண் மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டும் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பலரும் பொங்கியுள்ளனர்.

LEAVE A REPLY