பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று யார் வெளியேற்றப்படுகிறார் தெரியுமா?

0
1106

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவோர் பட்டியலில் சினேகன், வையாபுரி, ஆரவ் ஆகியோர் உள்ளனர். இன்றைய ப்ரொமோ வீடியோவில் அதை தான் காட்டியுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப் போகிறார்கள் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

வையாபுரி அண்ணன் மற்றும் ஆரவ் மிகவும் நெருக்கமானவர்கள். அதனால் அவர்களில் யார் வெளியேற்றப்பட்டாலும் நான் ஃபீல் பண்ணுவேன் என்று பிந்து கமலிடம் தெரிவித்துள்ளார்.

ப்ரொமோ வீடியோவில் வையாபுரி பச்சை நிற டி-சர்ட் அணிந்துள்ளார். இந்நிலையில் வையாபுரி அதே டி-சர்டில் தனது வீட்டிற்கு முன்பு நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வையாபுரி தான் எலிமினேட் செய்யப்படுவார் என்று பலரும் அந்த புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY