பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த ஜூலியின் நிலைமை என்ன ஆச்சி ?

0
6886

ஜூலி, ஓவியாவுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து காயத்ரி கும்பலுடன் ஐக்கியமானது முதல் ஜூலியை வெளியேற்ற ரசிகர்கள் முடிவெடுத்துவிட்டனர்.   இதனையடுத்து ஜூலியை ரசிகர்கள் நேற்று வெளியேற்றிவிட்டனர். மேலும் ஓவியாவின் மன அழுத்தத்திற்கு ஜூலியும் ஒரு காரணம் என ரசிகர்கள் ஜூலி மீது பயங்கர கோபத்தில் இருந்தனர்.

மேலும் பரணி விஷயத்திலும் ஜூலி அப்படியே திடீரென பல்டி அடித்து மாறிவிட்டார்.
இந்நிலையில் தனது தவறை உணர்ந்த ஜூலி நேற்று பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் பரணியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பரணியை அண்ணன் என்று கூறிய நிலையில் அவர் வீட்டின் சுவர் ஏறி குதிக்கும்போது தடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு ஜூலியின் மனதில் இருந்ததாகவும், அவரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மன ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்ததால் அவர் பரணியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிகிறது.

. அதன் பின்னர் முகத்தை மூடிக்கொண்டு இருந்த ஜூலியை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY