புன்னகையரசியின் லட்சியம் பலிக்குமா?

0
882

ரகுல் பிரீத்சிங் சிந்தின்  புன்னகையை தரிசிப்பதற்காகவே, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள தியேட்டர்களின் முன் தவம் கிடக்கின்றனர், அவரது ரசிக கோடிகள். அந்த அளவுக்கு, தன் புன்னகையால், ரசிகர்களை வசியம் செய்துள்ளார், ரகுல் பிரீத்சிங்.

தமிழில் அவர் நடித்த என்னமோ ஏதோ படம் சரியாக போகவில்லை. இதனால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து, தெலுங்கில் முழு கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது, கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து வருகிறார். மகேஸ்பாபுவுடன் நடிக்கும் ஸ்பைடர் படமும், தமிழில் வெளியாகவுள்ளது. இதுதவிர, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள, பெயர் சூட்டப்படாத படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.

‘தெலுங்கை போலவே, தமிழிலும் எனக்கான வாய்ப்பு, தேடி வரும் என, உறுதியாக நம்பினேன்; அந்த நம்பிக்கை பலித்து விட்டது’ என்கிறார், ரகுல். திரையுலகில் இவருக்கு மிக நெருங்கிய நண்பர்கள், ராணாவும், ரெஜினாவும் தானாம். பாகுபலி படத்தில், ரம்யா நடித்த சிவகாமி கேரக்டரை போல், ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான், ரகுலின் லட்சியமாம்.

LEAVE A REPLY