மன்னர் வகையறா படத்தில் ஜூலி வரும் காட்சிகளை கலாய்த்த ரசிகர்கள்!!!

0
1797

விமல், ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா பொன்வண்ணன், ஜெயப்ரகாஷ், ஜூலி ஆகியோர் நடிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படம் ஆக்‌ஷன் காமெடி படமாக ஃபேமிலி சப்ஜெக்டில் உருவாகி இருக்கிறது. விமலுக்கு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. ‘மன்னர் வகையறா’ படத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

விமல், ஆனந்தி ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘மன்னர் வகையறா’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு விருப்பமான வகையில் இருக்கிறது. இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ஜூலி.

‘மன்னர் வகையறா’ படத்தில் பிக்பாஸ் ஜூலி நடித்திருப்பதாக முன்பே தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கும் முன்பு வரை ஜூலி வராததால் படத்தில் நடிக்கவில்லையோ என தியேட்டரில் இருந்தவர்களே முணுமுணுத்தனர்.

கிளைமாக்ஸ் காட்சியில் மணப்பெண் தோற்றத்தில் வந்து ரசிகர்களை ஆச்சரியப் படுத்தினார் ஜூலி. அவர் கல்யாண புரோக்கரின் பெண்ணாக வருகிறார். அவரை விமல் திருமணம் செய்யவிருப்பதாக நினைத்து, விமல் குடும்பத்தினர் ‘நம்ம குடும்ப மானம் போயிரும்டா’ எனக் கத்துகிறார்கள்.

நல்லவேளையாக, ஜூலிக்கு வேறொருவர் தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்வார். தாலி கட்டும்போது, ஜூலியிடம் “நீ லவ் பண்ணிருக்கியா” எனக் கேட்பார் அந்த மாப்பிள்ளை. அதற்கு, லவ்… என இழுத்து, ‘பண்ணலேன்னு சொல்ல வந்தேன்’ எனச் சொல்வார் ஜூலி.

ஜூலியை திருமணம் செய்யப்போவதாக நினைத்து விமல் குடும்பத்தினர், ‘நம்ம குடும்ப மானம் போயிரும்டா’ எனக் கத்தியதைப் பார்த்து, ரசிகர்கள் ஜூலியை கலாய்த்து கமென்ட் அடித்தனர்.

 

 

LEAVE A REPLY