மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பரபரப்பு

0
540

முன்னாள் முதல் அமைச்சரான மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரீனாவில் அமைக்கப்பட்டு உள்ளது.  இங்கு பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த காவலர் ஒருவர் இங்கு பணியில் இருந்துள்ளார்.  அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  ஆனால் அவர் உயிரிழந்து விட்டார்.  அந்த நபர் மதுரையை சேர்ந்த அருள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY