மீரா மிதுன் போட்ட ஒரு டுவிட் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் !!

0
415

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுனுக்கு இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது நடிகையும், மாடலுமான மீரா மிதுன் எதற்கெடுத்தாலும் சீன் போட்டு,நீலிக் கண்ணீர் வடித்ததால் பார்வையாளர்களுக்கு அவரை சுத்தமாக பிடிக்காமல் போனது.

மீரா சேரனை அவமதித்ததாகக் கூறி அவரை சமூக வலைதளங்களில் பலரும் விளாசினார்கள்.மீரா மிதுனை வைத்து மேலும் பல பிரச்சனைகள் செய்ய பிக் பாஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசடி வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் போலீசார் மீராவிடம் விசாரணை நடத்த பிக் பாஸ் வீட்டிற்கே சென்றுவிட்டனர்.

இதையடுத்து தான் வேறு வழியில்லாமல் மனசே இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது திமிராக நடந்து கொண்ட மீராவின் கெரியர் அவ்வளவு தான் என்று பலரும் நினைத்தார்கள்.ஆனால் வெளியே வந்த வேகத்தில் அவருக்கு இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா.

இந்த தகவலை மீரா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அனு ஹீரோயின், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் சகோதரியாக நடிக்கிறார்.அப்படி இருக்கும் போது மீராவுக்கு என்ன கதாபாத்திரம் என்பது தெரியவில்லை. மீராவின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ ஒரு வேளை வில்லியாக இருக்குமோ
என்று கமெண்ட் போட்டுள்ளனர். சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சிலரோ அய்யோ, எங்க அண்ணன் பாவம். தயவு செய்து அந்த படத்தில் நீங்க நடிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.சிவா என்னை இடுப்பில் தொட்டார் என்று ஏதாவது பிரச்சனை செய்துவிடுவாரோ என்பது தான் சி.கா.

ரசிகர்களின் முக்கிய கவலையே. நம்ம வீட்டு பிள்ளை தவிர நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிக்கும்
அக்னி சிறகுகள் படத்திலும் நடிக்க மீரா மிதுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நல்ல பெயர் எடுத்தவர்களுக்கே சரியாக வாய்ப்பு கிடைக்காத
போது மீராவுக்கு எப்படி அதற்குள் இரண்டு பட வாய்ப்பு கிடைத்தது என்று சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

 

 

 

LEAVE A REPLY