வருகிறார் சர்வர் சுந்தரம்

0
846

தில்லுக்கு துட்டு படத்திற்கு பிறகு சந்தானம் நடித்த படம் சர்வர் சுந்தரம். கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆனந்த் பாஸ்கி இயக்கி உள்ளார். வைபவி சாண்டில்லா சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். நாகேஷின் பேரன் ஜிதேஷ் மற்றும் ராதாரவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

ஒரு வருடத்துக்கு முன்பே படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இந்தப் படத்திற்கு பிறகு சக்கபோடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கணும் படத்திலும் நடித்து முடித்து விட்டார். அடுத்த ராஜேஷ் படத்திலும் நடிக்க ஆயத்தமாகி விட்டார் சந்தானம்.

பலமுறை வெளிவரத் தயாரான படம் சில பிரச்னைகளால் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற 29ந் தேதி படம் வெளிவருதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சக்கபோடு போடுராஜா, ஓடி ஓடி உழைக்கணும் படங்களும் வெளிவந்து விடும். டிசம்பருக்குள் ராஜேஷ் படத்தையும் முடித்து வெளியிடும் ஆர்வத்தில் இருக்கிறார் சந்தானம்.

 

LEAVE A REPLY