விஷால் திருமணம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
900

நடிகர்  விஷால் செல்லமே படத்தில் அறிமுகமாகி சண்டக்கோழி, திமிரு, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், கதகளி, துப்பறிவாளன் உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர்  தற்போது அயோக்யா படத்தில்லும்  நடிக்கிறார்.

 

40 வயதை தாண்டிய விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரின் பால்ய பருவத்து தோழியும், நடிகையுமான வரலட்சுமியை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வரும். ஆனால் இருவருமே மறுத்தனர். நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்பார்கள்.

 

இந்த நிலையில் விஷால், தனது உறவுக்கார பெண் அனிஷாவை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பெற்றோர்கள் அவருக்கு அனிஷாவை பேசி முடித்திருப்பதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது.

 

நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் முதல் திருமணமாக எனது திருமணம் நடக்கும் என்று விஷால் கூறியிருந்தார். கட்டட பணிகளும் தற்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY