குறும்பட இயக்குனரின் வெறி செயல்!!!

0
257

சென்னை :பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 21ம் தேதி இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை ஆகியவை வெட்டப்பட்ட நிலையில் உடல் பாகங்கள் கிடந்தன. அது ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் என கண்டறியப்பட்டது. அவர் யார் என்ற விபரம் தெரியாமல் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில், இந்த சம்பவத்தை செய்தது சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் என்பதும், வெட்டப்பட்ட பெண், அவரது மனைவி சந்தியா என்கிற விபரமும் தெரியவந்துள்ளது.

 

பாலகிருஷ்ணன், குறும்படம் மற்றும் ஒரு படத்தை இயக்கி உள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பாலகிருஷ்ணன் பிரச்னை செய்து வந்தார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

 

இதனால் ஆத்திரத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் சந்தியாவை கொலை செய்து, அவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். கை, இரண்டு கால்களை கே.கே. நகர் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் வீசியுள்ளார். மீதமுள்ள உடல்பாகங்களை ஜாபர்கான்பேட்டை அருகில் உள்ள ஆற்றில் வீசியதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து போலீசார் பாலகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சில உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஆனால் தலையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY