பிரபல குத்தாட்ட கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டலா?

0
724

ஒரு காலத்தில் குத்தாட்ட நடிகையாவும், கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் ஜோதிமீனா. பிரபல கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் மகள். தற்போது அவர் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் அதிலிருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். சென்னை தி.நகரில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஜோதிமீனா பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் நள்ளிரவில் என் வீட்டுக்குள் புகுந்த 3 பேர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள். என்னை கொலை செய்து விடுவதாகவும் சொன்னார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார்.

போலீஸ் விசாரணையில் வீட்டுக்குள் புகுந்த 3 பேரும் ஜோதிமீனாவின் நண்பர்கள் எனவும். வேறொரு பிரச்சினையில் இருவரும் ஜோதிமீனாவை மிரட்டியதும் தெரியவந்தது. இந்த நிலையில் தான் கொடுத்த புகாரை ஜோதிமீனா வாபஸ் பெற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY