போலீசை உஷார் படுத்திய டிஜிபி…!காரணம் இது தான் ?

0
4974

தமிழகத்தில் உள்ள சிறப்பு காவல் படையை உஷார் நிலையில் இருக்குமாறு தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். எந்த அசாதாரண சூழலையும் எதிர்கொள்ள தயராக இருக்கும் படி அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநகர கமிஷனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இந்த உஷார் படுத்தல் ஏன் என்று விசாரித்த போது. இரண்டு காரணங்களுக்காவே இப்படி உஷார் படுத்த முடியும். மாநிலத்தில் அசாதாரண சூழல் எழுந்தால் போலீசார் உஷார் படுத்தப்படுவார்கள். அப்படி மத, சாதி ரிதியிலான கலவர அபாயம் தமிழகத்தில் இல்லை. அடுத்து கருணாநிதியின் உடல் நிலை அவருடைய உடல் நிலை நார்மாலாகவே இருக்கிறது. எஞ்சியிருக்கும் ஒன்றே ஒன்று ஆட்சி கலைப்புதான்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக “அம்மா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் கும்பலாக பொய் சொன்னோம்” என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதை அடுத்து மிகப்பெரிய சர்ச்சைகள் வெடித்தன.ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவை பார்த்த போது கையசைத்ததாக சொன்னது பொய் என்று தீபக் தகவலை வெளியிட ஜெயலலிதா மரணத்தின் மீதான சர்ச்சை நிழல் மத்தியில் ஆளும் பாஜக மீது விழுவதையும் ஆளுநர் மீது விழுவதையும் பாஜக விரும்பவில்லை. தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து ஆட்சி நடத்துவார்கள் என்று பார்த்தால் உளறி உளறி தங்களுக்கும் வம்பு சேர்க்கிறார்கள்.

என்ற கடுப்பில் ஆளுநர் தமிழக ஆட்சியை கலையுங்கள். அல்லது என்னை தமிழகத்தில் இருந்து விடுவித்து விடுங்கள் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் இந்த ஆட்சி நீடிப்பது தொடர்பாக வெவ்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகியிருக்கும் நிலையில் அது மத்திய அரசுக்கோ கவர்னருக்கோ சட்டச்சிக்கலை உருவாக்கி விடக் கூடாது என்று கருதியுமே இப்படி பரிந்துறைத்ததாக தெரிகிறது.

இன்றோ நாளையோ இந்த அரசு கலைக்கப்படலாம். அப்படி கலைக்கப்படும் நிலையில் அசாதாரண சூழல் எழுந்தால் அதை எதிர்கொள்ளவே இந்த எச்சரிக்கை என்கிறது தகவல் அறிந்த வட்டாரம்.

 

LEAVE A REPLY