விஜய் அட்லி கூட்டணியில் அமையும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

0
327

விஜய் சர்கார் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லியுடன் 3 -வது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நடந்து வந்தது.நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளது படக்குழு.

 

 

இப்  படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடிக்கிறார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர். மேலும் இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY